Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
Today Rasi Palan 03 November 2025: இன்று இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. பூரம், உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல பலன்களைப் பெறுகூர்கள். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செயல்களால் சிறிது பதற்றத்தை உணரக்கூடும். இன்று பரிவர்த்தனைகளை செய்தால், இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வேலை குறித்து மன அழுத்தத்துடன் இருப்பீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். புதிய தொழிலை தொடங்க எண்ணம் எழலாம். அனுபவத்தை பயன்படுத்தினால், நீங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். வேலைகளில் தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் தாயுடன் சில குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும், இல்லையெனில் கடுமையான சண்டை ஏற்படக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க இன்று கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று சிறந்த நாளாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்பத்தின் அந்தஸ்தும், கௌரவமும் உயரும். ஆனால் அவசரமாக எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். எதிரி உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கலாம். துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று முக்கியமான நாளாக இருக்கும். உங்களின் எதிரிகள் இன்று வலிமையாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் உங்கள் செறிவு அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களின் வருமானம் அதிகரிக்கும். பேச்சில் மென்மைத் தன்மையை பராமரிக்க வேண்டும். வேலையில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், அவற்றைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். உங்களின் பொறுப்புக்களில் அலட்சியமாக இருக்கமாட்டீர்கள். தந்தையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை வலுவடையும். உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். மற்றவர்களின் விஷயங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பணத்தைதொடர்பாக குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அந்நியர்களுடன் கலந்தாலோசிப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வேலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத வாகனப் பழுதடைதல் உங்கள் செலவுகளை அதிகரிக்கக்கூடும். வேலையில், குழுப்பணி மூலம் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பழைய நண்பரைச் சந்திப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். . குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். கடந்த கால தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். புதிதாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எழலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளை பெறுவீர்கள். புத்திசாலித்தனமான முடிவுகள் உங்களுக்கு நன்மை பயக்கும். மற்றவர்களை நம்பாதீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். தொழிலதிபர்கள் இந்த நாளை லாபகரமாகக் காண்பார்கள். உங்கள் உடல்நலத்தில் ஏற்படும் சில ஏற்ற இறக்கங்கள் உங்களை சங்கடப்படுத்தும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











