Today Rasi Palan 02 மே 2025: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்...!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதி வெள்ளிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 02 May 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் அவசரத்தில் எடுப்பதைதத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றங்களைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும், சிறிய விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

ரிஷபம்

ரிஷப மிதுன ராசிக்காரர்கள் இன்று கலவையான நாளை எதிர்பார்க்கலாம். அவர்களின் ஆரோக்கியம் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் சில ஏமாற்றமான செய்திகளை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் பெரிய இழப்புகள் ஏற்படலாம். விபத்துகளைத் தவிர்க்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணைவரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று தங்கள் வேலையில் அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் வழிகாட்டுதலும் கிடைக்கும். உங்கள் பணிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலையைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் வணிகத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வீர்கள். குழந்தைகள் புதிய பாடத்திட்டத்தில் சேரலாம். சுற்றியிருப்பவர்களுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களின் எந்த வேலையையும் மற்றவர்களிடம் விட்டுவிடாதீர்கள். நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஏதாவது புதிய மின்னணுப் பொருட்களை வாங்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கலாம். வேலையில் இருப்பவர்கள் புதிய தொடர்புகளால் ஆதாயம் அடையலாம். குடும்ப விஷயங்கள் உங்களை பிஸியாக வைத்திருக்கும். உங்கள் மனைவியுடனான பிரச்சினைகள் தீர்க்கப்படும். நீங்கள் ஒரு புதிய வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். உங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அதில் சிலவற்றை நீங்கள் மீட்டெடுக்கலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முக்கியமான தகவல்களை வேறு யாருக்கும் நீங்கள் வெளிப்படுத்தாதீர்கள். உங்களுக்கு புதிய வேலைகளில் ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயின் ஆரோக்கியம் குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுமாரான நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் ஏற்படும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். சிங்கிளாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஒருவரை பார்க்கலாம். மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தொழிலில் சில நிதி இழப்புகள் ஏற்படக்கூடும், இது உங்கள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பாதிக்கும். பணக் கவலைகள் காரணமாக சில முக்கியமான வேலைகள் நிறுத்தப்படலாம், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். நீங்கள் ஒரு குறுகிய பயணத்தைத் திட்டமிடலாம், அது பலனளிப்பதாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ச நிறம் நீலம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செலவுகளை கவனமாக திட்டமிட வேண்டும். இருப்பினும், உங்கள் வருமானம் அதிகரிக்கும், இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். புதிய சொத்து வாங்க நீங்கள் திட்டமிடலாம். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வதந்திகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காவிட்டால் அதிகமாக வருத்தப்படுவீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பி செலுத்தும் வாய்ப்புக்களைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் நேரத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள், இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களைச் செய்வீர்கள், அது உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். குடும்ப உறுப்பினரின் உடல்நிலை குறித்து கவலை கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, May 2, 2025, 5:20 [IST]
Desktop Bottom Promotion