Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
Today Rasi Palan 02 December 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கப்போகுது..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று பழைய நோய்கள் மீண்டும் தோன்றி தொந்தரவு செய்யலாம். வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். குடும்ப பொறுப்புகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். தேவையற்ற செலவுகள் பற்றி நீங்கள் கொஞ்சம் மன அழுத்தத்துடன் இருப்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று புதிய எதிரிகள் சிலர் உருவாகலாம். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு அருமையான நாளாக இருக்கும். புதிய சொத்துக்களை வாங்க நினைத்தால், இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் விலைமதிப்புமிக்க பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை திருடுபோக வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று முன்னேற்றத்தைத் தரும் நாளாக இருக்கும். உங்கள் வேலையைத் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் தகராறில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நினைத்த காரியங்களை செய்வீர்கள். பழைய தவறை மீண்டும் செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். யாரிடமாவது கடன் கேட்டிருந்தால், அது கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் இன்று உங்களை தொந்தரவு செய்யலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்களின் செல்வம் பெருகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர் யாராவது வேலைக்காக வீட்டை விட்டு வெளியே தங்கி இருந்தால், இன்று அவர் வீட்டிற்கு வரலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்கள் நண்பர்களில் ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கலாம். புதிய வாகனத்தை இன்று நீங்கள் வாங்கலாம். உங்களுடைய பழைய பரிவர்த்தனைகள் ஏதேனும் உங்களை தொந்தரவு செய்திருந்தால், அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பார்கள். அதனால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் சிந்தனையுடன் முதலீடு செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக யாரையம் நம்பாதீர்கள். முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய எதிரிகள் சிலர் உருவாகலாம். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று காதலிப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் வெளியே செல்லாம். கூட்டு தொழில் செய்பவர்கள் கையெழுத்திடும் முன் ஆவணங்களை நன்கு கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றமடையலாம். மூதாதையர் சொத்து விஷயத்தில் சற்று ஏமாற்றம் அடைவீர்கள். முக்கியமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால் பிரச்னைகள் நற்தின்ன நேரிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எதற்கும் தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும், உங்கள் பேச்சையும் நடத்தையையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும், இல்லாவிட்டல் கேட்ட பெயரைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் பெரிய பதவியைப் பெறுவார்கள். வியாபாரத்தில் சில பெரிய மாற்றங்களைச் செய்யலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று ஆடம்பரங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஏனெனில் உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக நடந்து வரும் எந்தவொரு சட்டப் பிரச்சினையும் தீர்க்கப்படலாம். உங்களின் சுபாவம் காரணமாக, பணியிடத்தில் சில தவறுகள் செய்யலாம், அது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு புதிய எதிரிகள் சிலர் தோன்றுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











