Today Rasi Palan 01 செப்டம்பர் 2025: மாதத்தின் முதல் நாளே இந்த 4 ராசிக்காரர்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம்!

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 01 September 2025 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

மேஷம்

இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள். நிதி பிரச்சனைகள் தீருவதோடு, புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். வணிகர்களுக்கு தொழில் சார்ந்த உறவுகள் வலுவாக இருக்கும்.வேலையில் உள்ளவர்கள் எந்தவொரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வீட்டின் பெரியவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

ரிஷபம்

இன்று சில முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்படுவதால் மன சங்கடம் ஏற்படலாம். ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வணிகர்களின் நிதி நிலைமை மேம்படும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான வணிக முடிவை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மிதுனம்

இன்று உங்களுக்கு ஒரு இனிமையான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கலாம். வேலை சம்பந்தமான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உங்களின் இந்த பயணம் மிகவும் சிறப்பாக அமையும். நிதி நெருக்கடிகள் நீங்கி நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். தொழிலதிபர்கள், கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் வணிக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளுக்கு போதுமான நேரம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு நெருக்கமாகும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

கடகம்

இன்று உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். மேலும், உங்கள் ஆளுமையும் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவதற்கு சாதகமான நாள். தொழிலதிபர்கள் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

சிம்மம்

இன்று எதிர்பாராத தோல்வியால் இன்று நீங்கள் சற்று வருத்தம் அடைவீர்கள். ஆனால், விடா முயற்சியுடன் தொடர்ந்து முயற்சித்தால், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வீட்டு உறுப்பினர்களிடம் பேசும்போது கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கன்னி

இன்று தவறான நபர்களின் சகவாசத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களுக்கு நீங்களே பெரிய பிரச்சனையை உருவாக்கி கொள்வீர்கள். உங்கள் செயல்திறனை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாது. வியாபாரிகளுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதில் சிரமம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் முழுமையடையாத வேலைகளை விரைவில் முடிக்க முயற்சியுங்கள். இல்லையெனில், வரும் நாட்களில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். வீட்டின் பெரியவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

துலாம்

இன்று மற்றவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுவதை முதலில் நிறுத்துங்கள். உங்களின் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. பணம் தொடர்பான கவலைகள் நீங்கி நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் வேலை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

விருச்சிகம்

இன்று வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். வேலை நிமித்தமாக சிறு பயணம் செய்ய வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு பழைய தொடர்புகளால் புதிய வணிக ஆதாரங்கள் கிடைக்கலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் இடமாற்றத்தையும் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையை உண்டாகலாம். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அவர்களின் வேலை தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். நீங்கள் புதிய சொத்துக்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சரியான நாள் இல்லை. வதந்திகளை நம்புவதால் பிரச்சனைகள் வரலாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டை அலங்கரிக்க சில புதிய பொருட்களை வாங்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஓரளவுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் துறையில் செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும். தம்பதிகள் சிறப்பான நாளை அனுபவிக்கலாம் மற்றும் கவலையற்ற மனநிலையை அனுபவிக்கலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆற்றலை சரியான செயல்களில் பயன்படுத்தினால், அது உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் துணையுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்குள் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், அதைப்பற்றி ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

மீனம்

சமீபத்தில் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொண்டிருந்தால், இன்று அதற்கான நற்பலனைப் பெறுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக தருணங்கள் நிறைந்திருக்கும். கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 1, 2025, 5:00 [IST]
Desktop Bottom Promotion