Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி பகவானின் பார்வையால் இந்த ராசியினருக்கு தீபாவளி முதல் பொற்காலம் ஆரம்பம்.. இதில் உங்க ராசி இருக்கா?
சனி கிரகம் சூரிய குடும்பத்தில் மிகவும் வலிமையான கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சனி எப்போதுமே தீய விளைவுகளை மட்டுமே தரும் என்ற தவறான கருத்து உள்ளது.. ஆனால் அது அப்படி இல்லை.. சனி கர்மாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்..
நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான்தான். அதே போல நல்லது செய்தால் நமக்கு பலவித நன்மைகளை அள்ளித் தருவார்.. அது நீதியின் பாதையை நமக்கு பின்பற்ற கற்றுக்கொடுக்கிறது.

அதனால் அவர் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.. அதாவது சனியும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் வேலையை செய்கிறார் என்றே சொல்லலாம்.. கடந்த பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்கள், அதன்படி நீங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சனியும் ஒரு நீதிபதிதானே.. மேலும் இவர் நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுகிறார்.. ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான்தான். சனி பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். இந்த நாளில் சனி பகவானை மனம் குளிர வழிபாடு செய்வதுடன், தான தர்மங்களையும் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறது ஜோதிடம்...
அந்த வகையில் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் சனி சஞ்சாரம் செய்து வருகிறார். 139 நாட்கள் சனியின் இந்த வக்ர பெயர்ச்சியானது, தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 15ம் தேதி முதல் நேர்முக பெயர்ச்சியை தொடங்க போகிறது.. அப்படி கும்பத்தில் சனி சஞ்சரிப்பதாலும் நேர்முகமாக நகர்வதாலும் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்.. அதாவது, பணம், புகழ், மரியாதை, ஆகிய அனைத்தும் வீடு தேடி வரும்.. அது எந்தெந்த ராசியினர் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
மேஷம்
இந்த ராசியினர் சனியின் wஏர்முக பெயர்ச்சியால் எதிலும் சாதக சூழல் இருக்கும். எதிர்பார்த்த வெற்றியை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சனி பகவானால் உங்களின் தொழில், வணிகத்தில் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகள் அதிகரிக்கும்..
கடகம்
இந்த ராயினருக்கு சனியின் நேர்முக பெயர்ச்சி பல விதத்தில் பலன்களை தரும்.. குறிப்பாக இரும்பு, எண்ணெய் தொடர்பான துறையில் இருப்பவர்கள் மிக அற்புதமான பலன்கள் பெறுவார்கள்.. வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.. நீங்கள் தொழிலில் வெற்றியை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை அடைவீர்கள்.. நினைத்தது அனைத்தும் நடக்கும் காலம் இது..
கன்னி
இந்த ராசியினருக்கு சனியின் நேர்முக பெயர்ச்சியால் அனைத்துமே சாதகமானதாக அமையும்... கடன் தொல்லைகள் நீங்கும்... உங்களின் நோயிலிருந்து விடுபடுவீர்கள்.. நீதிமன்ற வழக்கு, தகராறுகள் தீர்ந்து தீபாவளிக்கு பிறகு வாழ்க்கை நிம்மதி பெறும்.. நிதி நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..
மகரம்
இந்த ராசியினருக்கு சனியின் நேர்முக பெயர்ச்சி நேர்மறையான பலன்களை கொடுக்கும்.. அதனால் உங்களின் நிதி நிலை முன்னேற்றம் அடையும். முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.. ஏழரை சனி நடந்தாலும் சனியின் கெடுபலன் குறையும்.
கும்பம்
இந்த ராசியினருக்கு சனியின் நேர்முக பெயர்ச்சியால்பலவித நல்ல பலன்கள் கிடைக்கும்..அதனால் உருவாகும் ஷஷ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறுவார்கள்.. வாழ்க்கையில் முன்னேற்றமும், பேச்சில் இனிமையும் அதிகரிக்கும்.. தன்னம்பிக்கை மேலோங்கும்.. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications