Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
பெருமாளுக்கு பிடித்த ராசியினர் யார் தெரியுமா? இதில் உங்கள் ராசி இருக்கா?
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.. நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது புரட்டாசி மாதம்தான்.. அந்த புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது.
மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி. இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது சிறப்பு... மேலும் புரட்டாசியில் எந்தெந்த ராசியினர் பெருமாளை வழிப்பட வேண்டும்.. ப்ருமாளின் ஆசி பெற்றவர்கள் யார் யார்? என்பது இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ராமாயணத்தில் ராமர் கடக ராசியில் புனர் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அது போலவே மகாபாரதத்தில் கிருஷ்ணர் ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே, ரிஷப ராசியினருக்குப் பெருமாளின் அருளாசி நிச்சயம் உண்டு. பெருமாளின் அவதாரமான பரசுராமன் அவதாரத்தில், பரசுராமன் கன்னி ராசியில் பிறந்திருப்பார். எனவே, கன்னி ராசியில் பிறந்திருப்பவர்கள் பெருமாளின் அம்சம் கொண்டவர்களாக இருப்பர். இந்த மூன்று ராசிகளில் பெருமாள் அவதாரம் எடுத்திருப்பதால், இவை பெருமாளுக்கு உகந்த ராசிகள் என அழைக்கப்படுகின்றன. இவர்கள் பெருமாளை நினைத்து வணங்கினால் நினைத்தது கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
கடகம்:
கடக ராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு பெருமாளின் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.. ராசிகளில் நான்காம் ராசியான கடகராசிக்கு சந்திரன் அதிபதியாவார். கடக ராசியினர் சுறுசுறுப்புடன் பணி செய்பவர்கள். கடக ராசியினர் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள். தலைமைப் பதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். சகிப்புத் தன்மையுடன் வாழ்வார்கள். இவர்களால் யாருக்கும் எந்த கெடுதலும் நடக்காது. உதவும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தான் கொண்ட வாதத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இத்தகைய பெருமாளின் அம்சம் கொண்ட கடக ராசியினர் பெருமாளை வணங்கினால் பலவித நன்மைகள் கிடைத்து பலன் பெறுவார்கள்..
ரிஷபம்
ரிஷப ராசியினர் வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். பேச்சில் கெட்டிக்காரர்கள். எதனையும் திட்டமிட்டு திறமையுடன் முடிக்கக்கூடியவர்கள். இந்த ராசியினர், தொழிலில் ஆர்வமுடன் இருப்பார்கள். நினைத்ததை முடித்துக்காட்டுவார்கள்.. அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்டவர்கள்.. எதிலும் கவனமாக இருப்பார்கள்..
கன்னி
கன்னி ராசியினர், யாரையும் புண்படுத்தமாட்டார்கள். தவறு செய்பவர்களைக்கூட அன்பால் திருத்திவிடுவார்கள். பன்முக துறையில் பணியாற்றிவிட்டு வெற்றி காண்பார்கள். இடத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை அஜெஸ்ட் செய்துக் கொள்ளும் பண்புகள் உடையவர். தலைமை பண்புக் கொண்டவர்.. எதையும் விட்டுக் கொடுக்கும் மனம் படைத்தவர்.. பிறருடன் சண்டை போடாமல் காரியத்தை சாதுர்யமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications