Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Thaipusam 2026: முருகனின் அருளால் தைப்பூசம் நாளில் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்!
Thaipusam 2026 Lucky Zodiac Signs: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய விஷேசமான நாட்களுள் ஒன்று தான் தைப்பூசம். இந்த தைப்பூச தினமானது தை மாத பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
முருக பக்தர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய இந்த தைப்பூச நாளில் பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள். முக்கியமாக காவடி எடுத்து முருகனை வழிபடும் வழக்கமானது பழனியில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூசம் எதனால் கொண்டாடப்படுகிறது என்று பலரது மனதிலும் கேள்வி எழலாம். இந்த தைப்பூசத்திற்கும் பழனிக்கும் தொடர்புள்ளது. ஏனெனில் இந்நாளில் தான் பழனி மலை தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்தால், கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இந்த ஆண்டின் தைப்பூசம் பிப்ரவரி 01 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் பல சுபயோகங்கள் உருவாகின்றன. அதில் ஒன்று தான் குபேர யோகம். இந்நாளில் முருகனின் ஆசியைப் பெறும் சில ராசிகள் உள்ளன. இப்போது தைப்பூசம் நாளில் முருகனின் ஆசியால் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
தைப்பூச நாளில் உருவாகும் பல யோகங்களால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதுவும் மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் பகவான் முருகப்பெருமானின் செல்வாக்கின் கீழ் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். திடீர் அதிர்ஷ்டத்தால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
விருச்சிகம்
2026 ஆம் ஆண்டின் தைப்பூசமானது விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது. இந்த விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். இந்த செவ்வாய் முருகப்பெருமானின் செல்வாக்கின் கீழ் இருப்பதால், பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டின் தைப்பூச நாளில் முருகப்பெருமானின் ஆசியைப் பெறுவார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், சொந்த வீடு, வாகனம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு, முருகனின் அருளால் நல்ல வரன் தேடி வரும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் ஆசியைப் பெற்ற மீன ராசிக்காரர்கள் தைப்பூச நாளில் முருகப்பெருமானின் ஆசியால் கோடீஸ்வர யோகத்தை பெற்று, வாழ்க்கையில் நல்ல உச்சத்தை அடையவுள்ளனர். மேலும் இந்த ராசிக்காரர்கள் தைப்பூச நாளன்று முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை செய்தால், நல்ல பலன்களைப் பெறலாம். முருகப்பெருமான மனமுருகி வழிபாடு செய்தால், வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து, சந்தோஷம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications