Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் தை மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Thai Matha Rasi Palan 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சூரிய பெயர்ச்சியானது ஜனவரி 14 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியினால் தை மாதம் பிறக்கிறது மற்றும் இந்நாளில் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகர ராசிக்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக அதிர்ஷ்டம் பிரகாசித்து நல்ல நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் தை மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கன்னி
தை மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களின் ஈசை நிறைவேறும். காதல் உறவுகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தை மாதமானது பலவிதமான நன்மைகளை அளிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணிபுரிபவர்கள் இலக்குகளை எளிதில் அடைவார்கள். உங்களின் நடத்தையால் அலுவலகத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் சூரியனைப் போல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கப் போகிறது. அதுவும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் இலக்குகளை எளிதில் அடைவார்கள். இதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவதோடு, பல புதிய ஒப்பந்தங்களையும் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
