உங்க ராசி என்னனு சொல்லுங்க? எந்த கோவிலுக்கு போனா உங்கள் தலைவிதி மாறும்னு நாங்க சொல்றோம்...!

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி என்பது அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் சாவியாக இருக்கிறது. ஒருவர் எப்படிப்பட்டவர் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் திறன் என்னவென்பதை அவர்களின் பிறந்த ராசியை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் எண்ணற்ற கோவில்கள் இருந்தாலும் சில கோவில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். சில கோவில்கள் ராசிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவையாக இருக்கும். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் சில கோவில்கள் இருக்கும். இந்த கோவில்களுக்கு செல்வது அவர்களின் பாவங்களை போக்கி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவும். இந்த பதிவில் உங்கள் ராசியின் படி எந்த கோவிலுக்கு செல்வது உங்கள் தலைவிதியை மாற்றும் என்று தெரிந்து கொள்ளலாம்.

Temples to Visit According to Your Zodiac Sign

மேஷம்

ராமேஸ்வரம் தென்னகத்தின் வாரணாசி என அழைக்கப்படுகிறது. காசியிலோ அல்லது வாரணாசியிலோ யாத்திரையை தொடங்கினால், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியை வழிபட்டு முடித்த பின் தான் நிறைவடையும் என நம்பப்படுகிறது. இது முதல் ராசியான மேஷ ராசிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

ரிஷபம்

ஆந்திராவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் திருப்பதி மாவட்டத்தில் திருமலை வெங்கடாசலபதி கோவில் பிரபலமான ஒன்று. இங்கு திருமணம் செய்த தம்பதிகள் பிரியமாட்டார்கள் என நம்பப்படுகிறது. ரிஷப ராசியினருக்கான பரிகார ஸ்தலமாக திருமலை திருப்பதி விளங்குகிறது.

மிதுனம்

முருகன் ஞான பழம் கிடைக்காமல் கோபித்து கொண்டு வந்திறங்கியாக பழனி மலை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இது மிதுன ராசியினருக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

கடகம்

இந்திரனின் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் நண்டாக பூஜித்து இறைவனை சரணடைந்தது மற்றும் சந்திரன் இறைவனை வேண்டி சாபவிமோட்சனம் பெற்ற பெருமையை கொண்ட ஸ்தலமான திருத்தேவன்குடி கும்பகோணம் திருவீசநல்லூருக்கு அருகில் அமைத்திருக்கிறது. இது நண்டான் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடக ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

சிம்மம்

திருவாரூர் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருமாலும், எமனும் வழிபட்டதாக ஸ்தல வரலாறு சொல்கிறது. "காசியைவிட வீசம் அதிகம்" என காசியை விட மிகைப்படுத்தியும் இத்தலத்தை கூறுகிறார்கள். இது சிம்ம ராசியினருக்கான பரிகார ஸ்தலமாக இருக்கிறது.

கன்னி

புராணத்தின் படி, தினமும் கோயிலுக்கு வந்து பூசாரிகளிடம் உணவு பெறும் இரண்டு கழுகுகள் காரணமாக "கழுகு மலை கோயில்" எனவும், திருக்கழுகுன்றம் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் வேதகிரீஸ்வரர் கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

துலாம்

சூரனை வதம் செய்த பின் முருகன் கோபம் தணிந்து அமர்ந்த இடம் திருத்தணி. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகும். இந்த கோவிலில் முருகனை வழிபட்டால் மன அமைதி, நிம்மதி மற்றும் துன்பத்தில் இருந்து விடுபட முடியும் என நம்பப்படுகிறது. துலாம் ராசிக்கான பரிகார ஸ்தலமாக இந்த ஸ்தலம் விளங்குகிறது.

விருச்சிகம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், பார்வதி தேவி மண்ணால் ஆன சிவ லிங்கத்தை வழிபாட்ட சிவ ஸ்தலமாகவும் விளங்குகிறது, காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில். மேலும் இது விருச்சிக ராசிக்காரர்களுக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

தனுசு

பார்வதி தேவி மயில் வடிவில் இறைவனை வழிபட்டதால், இறைவனும் மயில் வடிவில் வந்து கௌரி தாண்டவம் காட்டிய புகழ் பெற்ற திருத்தலம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில். இது தனுசு ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

மகரம்

சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் எனவும், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் எனவும் சிதம்பரம் நடராஜர் கோயில் அழைக்கப்படுகிறது. சிவனை வணங்குபவர்கள் சொல்லும் "திருச்சிற்றம்பலம்" எனும் சொல்லும் இந்த தலத்தையே குறிக்கும். இது மகர ராசிக்காரர்களுக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

கும்பம்

இலங்கைக்கு போருக்கு செல்லும் முன் ராமபிரான் வழிப்பட்ட சிவ ஆலயமாக தேவிபட்டினம் திலகேஸ்வர் கோவில் கருதப்படுகிறது. இது 1000 வருடங்களுக்கு சிவ ஆலயங்களில் ஒன்று. இது கும்ப ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

மீனம்

தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவகிரங்களில் ஒருவரான செவ்வாயை குணப்படுத்தி சீர்காழியில் வைத்தீஸ்வரனாக வீற்றிருக்கிறார் சிவபெருமான். இங்கு நாடி ஜோசியம் எனப்படும் பனை ஓலை ஜோதிடத்திற்கு பெயர் பெற்றது.
இது மீன ராசிக்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion