Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
விசுவாவசு தமிழ் புத்தாண்டு 2025: மேஷம் முதல் கடகம் வரையிலான 4 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
Tamil Puthandu Rasi Palan 2025: ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும், அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். இது ஆங்கில புத்தாண்டிற்கு மட்டுமின்றி, தமிழ் புத்தாண்டிற்கும் பொருந்தும். பொதுவாக தமிழ் மாதங்களானது சூரியன் ராசியை மாற்றும் போது பிறக்கின்றன.
அதில் சூரியன் மேஷ ராசிக்கு செல்லும் போது தான் புதிய ஆண்டு பிறக்கிறது. தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இதில் 39 ஆவது ஆண்டு தான் விசுவாவசு ஆண்டு. இந்த புதிய ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதத்துடன் பிறக்கிறது.

இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறந்த நேரத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வையை பொறுத்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. ஏழரை சனி காலம் என்றாலும் பயப்படத்தேவையில்லை. விரைய சனி சுப விரைய செலவுகளை ஏற்படுத்துவார். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குருபகவான் இந்த ஆண்டு மே மாதத்தில் மூன்றாம் வீட்டிற்கும் அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக 4 ஆம் வீடான கடக ராசிக்கும் செல்கிறார். சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். டிசம்பர் மாதத்தில் குரு மீண்டும் வக்ரகதியில் மூன்றாம் வீட்டிற்கும் வந்து பயணம் செய்யப்போவதால் நினைத்த காரியம் நிறைவேறும். லாப வீட்டில் பயணம் செய்யும் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேதுவும் உங்களுக்கு நிறைய பண வருமானத்தையும் ஆன்மிக பயணங்களையும் தரப்போகின்றனர்.
ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. லாப சனி நிறைய லாபங்களை அள்ளித்தரப்போகிறார். அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். ஜென்ம குரு உங்கள் ராசியை விட்டு விலகி இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் பண வருமானம் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் குரு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் குரு பலன் கைகூடி வரப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறும். ராகு 10 ஆம் வீட்டிற்கும் கேது 4 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் நல்ல வேலை கிடைக்கும். தொட்டது துலங்கும் ஆண்டாக விசுவாவசு தமிழ் புத்தாண்டு அமையப்போகிறது.
மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்யப்போவதால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. மே மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வந்து ஜென்ம குருவாகப் பயணம் செய்யப்போகிறார். குரு பார்வை சாதகமாக இருப்பதால் திருமணம் கைகூடி வரப்போகிறது. அக்டோபர் மாதம் முதல் குரு பகவான் அதிசாரமாக இரண்டாம் வீடான கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் திருமண யோகம் கைகூடி வரும். ராகு பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டிற்கும் கேது 3 ஆம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கும் வரப்போவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்வதால் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் வரப்போகிறது. நோய்கள், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. குரு பகவான் ஆண்டின் முற்பகுதியில் விரைய ஸ்தானத்திலும் அக்டோபர் மாதத்திற்கு மேல் உங்கள் ராசியில் வந்து உச்சம் பெற்றும் பயணம் செய்யப்போவதால் குரு பலன் வரப்போகிறது. வேலையில்லாதவர்களுக்கும் வேலையை இழந்தவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். அஷ்டம ராகு உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications