Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கைமேல் பணம் குவியப்போகுது..
Sun Transit Three Times In February 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மரியாதை, கௌரவத்தின் காரணியாவார். மேலும் இவர் சிம்ம ராசியின் அதிபதியும் கூட. இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் சூரியன் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக, பிப்ரவரி 06 ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் பிப்ரவரி 19 ஆம் தேதி சூரியன் சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இப்படி 3 முறை சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் எதிர்பாராத அளவில் நல்ல வளர்ச்சியையும் காண்பார்கள். அரசு வேலை செய்பவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இம்மாதத்தில் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
மேஷம்
பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்வில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். எடுத்த வேலைகள் ஒவ்வொன்றையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
