Latest Updates
-
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்!
விசாக நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்கள் தலையெழுத்தே மாறப்போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உங்கள் வாழ்க்கையை நிதிரீதியாகவும், தொழில்ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் ராசிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
நவம்பர் 6, 2024 அன்று, சூரியன் விசாக நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் விளைவாக, சிலர் தங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். விசாகம் சூரியனின் நண்பரான வியாழனால் ஆளப்படுகிறது. எனவே இந்த நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலன்களை மட்டுமே ஏற்படுத்தும். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சூரியனின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தர உதவுகிறது. சூரியன் மேஷ ராசியில் 7ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பெரும்பாலும் இது இந்த ராசியில் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. மேலும் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழ்கின்றன.
நீங்கள் விரும்பிய இலக்கை அடைய கிரகங்கள் உங்களுக்கு உதவும், மேலும் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவீர்கள். நவம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கையில பல சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். புதிய வணிகத் திட்டங்களைக் கொண்டு வந்து அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைவீர்கள். சமுதாயத்தில் நற்பெயரும், மரியாதையும் கிடைக்கும்.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவர்களுக்கு மூன்றாம் வீட்டில் சூரியனின் ராசி மாற்றம் நடைபெறுகிறது. பண விஷயத்தில் அவர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நன்மையயும் பெறுவார்கள். மேலும், ஒரு தொழிலைத் தொடங்க இது மிகவும் சாதகமான நேரம் என்பதில் சந்தேகமில்லை.
நிதி பலன்களுடன் மனதில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பெரும்பாலும் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய விரும்புபவர்கள் அந்த வாய்ப்பை இப்போது பெறலாம். மேலும் இது உங்கள் நிதிநிலை வேகமாக முன்னேற்றும்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி பெரும்பாலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகச் சிறந்த பலன்களை அளிக்கும். சூரியனின் நட்சத்திர மாற்றம் அவர்களின் பன்னிரண்டாம் வீட்டில் நடக்கும். இப்போது உங்களின் பணியிடத்தில் உங்களின் நேர்மைக்கான பலன்களை அனுபவிப்பீர்கள்.
வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். மேலும் உங்களுடன் சேர்ந்து மற்றவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவ நீங்கள் தயாராக இருப்பீர்கள். சில காலத்திற்கு உங்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் விடுமுறைக்கு செல்லும். சூரிய சஞ்சாரம் நீங்கள் அனைத்து வகையான சாதனைகளையும் பெறக்கூடிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

