Latest Updates
-
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 5 ராசிக்காரங்க மற்றவர்களை விட வாழ்க்கையில் ஈஸியாக ஜெயிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்க ராசி என்ன? -
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்..
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க..
Sun Transit In Virgo 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அந்த ராசியில் ஏற்கனவே உள்ள கேதுவுடன் சேர்ந்து பயணித்து வந்தார். இதனால் சில ராசிக்காரர்கள் பணியித்தில் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன்.
இப்படி கன்னி ராசிக்கு சூரியன் செல்வதால் சூரியன் கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபடவுள்ளனர். இப்போது சூரியன் கன்னி ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு வருமானம், லாபம் மற்றும் ஆசைகள் நிறைவேறுதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் தங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக புதிய தொழிலை தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தால், இக்காலம் அதற்கு உகந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் பண பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தால், சூரியனின் அருளால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கலாம்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு வேலை, தொழில், நற்பெயர் மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முக்கியமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல செய்தியைப் பெறக்கூடும்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், சூரிய பெயர்ச்சிக்கு பின் முயற்சித்தால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


