சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மார்ச் 18 முதல் இந்த 3 ராசிக்காரங்களோட அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...

Sun Transit In Uthirattathi Nakshatra On March 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குருபகவான். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையுவுள்ளார். இந்த பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார்.

Sun Transit In Uthirattathi Nakshatra On March 2025 These Zodiac Signs Get More Benefits

சனி பகவானின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜோதிடத்தில் உள்ள மொத்தம் 27 நட்சத்திரங்களில் பூரட்டாதி நட்சத்திரமானது 26 ஆவது நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். ஆனால் இந்த பூரட்டாதி கும்பம் மற்றும் மீன ராசியிலும் வருவதால், இந்த நட்சத்திரத்தை சனியுடன் சேர்ந்து குரு பகவானும் ஆளுகிறார். இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும். கடன் வாங்க முயற்சித்து கொண்டிருந்தால் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சிறப்பான திட்டங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பேச்சாலும், செயலாலும் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். வழக்கத்தை விட வேலையில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். இதன் மூலம் நல்ல நன்மைகளையும் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.

வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, March 13, 2025, 23:44 [IST]
Desktop Bottom Promotion