Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் மே 15 முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Sun Transit In Taurus On 15 May 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
தற்போது சூரியன் செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் வருகிற மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியின் அதிபதி செல்வம், செழிப்பு, அழகு, காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் ஆவார். சூரியன் இந்த சுக்கிரனின் ராசியில் நுழைவதால், தமிழ் மாதமான வைகாசி மாதம் பிறக்க போகிறது. இந்த ரிஷப ராசியில் சூரியன் ஜூன் 15 ஆம் தேதி வரை இருந்து, பின் புதனின் ராசியான மிதுன ராசிக்கு நுழைவார்.

சூரியன் ரிஷப ராசியில் நுழையும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் சூரியனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களில் நிதி விஷயங்களில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து செயல்படக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் குடும்ப விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தலைமைத்துவ குணங்கள் மேம்படும். ஈகோவால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஈகோவைத் தவிர்க்க வேண்டும். மிகவும் உறுதியாக உணர்வீர்கள். ஆனால் நெருக்கமானவர்களின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வெளிநாட்டு பயணங்களுக்கும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆசிரியர் மற்றும் எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். ஆனால் தனிப்பட்ட விஷயங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் பணிபுரியும் இந்த ராசிக்காரர்கள் பதவி உயர்வைப் பெறலாம். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தலைமை பதவிகளில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஆனால் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெற நினைத்தால், ஆணவத்தை தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் மற்றும் கூட்டு தொழில் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி, அமானுஷ்யம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பைப் பெறக்கூடும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் ஈகோ பார்ப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளை தோற்கடிப்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடன்களை அடைப்பது மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்வில் பலவிதமான சவால்களை சந்திக்கலாம். விடாமுயற்சிக்கான பலன் மெதுவாக கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பாக இருக்காது. காதல் உறவுகளிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மன அமைதி குறைந்து, மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இருப்பினும் ஆராய்ச்சி, போலீஸ் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஈகோ பிரச்சனையால் வீட்டில் உள்ளோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தெளிவான தொடர்பு மற்றும் ஒத்துழைப்புடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்த இது ஒரு நல்ல நேரம்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தகவல் தொடர்புகளில் அதிக நம்பிக்கையையும் தைரியத்தையும் எதிர்பார்க்கலாம். எதிரிகளை திறம்பட சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு தடைகளை சந்தித்தாலும், அதை முறியடித்து முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்களை கையாளும் போது அமைதியாக இருக்க வேண்டும். முக்கியமாக அதிக தன்னம்பிக்கையுடன் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











