Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
1 வருடம் கழித்து ரிஷபத்தில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க!
Sun Transit In Taurus 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன் வருகிற மே 15 ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ரிஷப ராசியில் சூரியன் நுழையும் போது தமிழ் மாதமான வைகாசி பிறக்கவுள்ளது. சூரியன் இந்த ரிஷப ராசிக்கு சுமார் 1 வருடத்திற்கு பின் செல்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் வேலையில் பதவி உயர்வு, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. இப்போது மே 15 ஆம் தேதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அதிர்ஷ்டசாலிகளாக இருக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பாக குறுகிய அல்லது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். தொழிலிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். புதிய பரிவர்த்தனைகளால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவுகள் வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், மே 15 ஆம் தேதி 10 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வசதிகள் பெருகும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தந்தையுடனான உறவு வலுவடையும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெற முடியும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாமியார், மாமனாருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications