Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சூரிய பெயர்ச்சியால் நவம்பர் 16 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Scorpio On 16 November 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விலகி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ராசிக்குள் சூரியன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்கலாம். இப்போது நவம்பரில் நிகழவுள்ள சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் பொறுமையுடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் வேலைகள் கெட்டுப்போகும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்சனைகளில் சிக்க வைத்துவிடும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் 16 முதல் கவனமாக இருக்க வேண்டும். உங்களை மற்றவர்கள் ஏமாற்றலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். மேலும் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மருத்துவ செலவை சந்திக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன்பிறப்புகளுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இலக்குகளை அடைய முடியாது. தொழில் ரீதியாக பல சவால்களையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வை உணர்வீர்கள். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் தவறான புரிதல் காரணமாக உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
