Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சூரிய பெயர்ச்சியால் வருகிற நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது...
Sun Transit In Scorpio On 16 November 2024: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் செல்லவுள்ளார். விருச்சிக ராசிக்கு சூரியன் செல்லும் போது தான் கார்த்திகை மாதம் பிறக்கிறது. விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். சூரியன் செவ்வாயின் ராசிக்குள் செல்லும்போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். வணிகர்கள் நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைப்பார்கள் மற்றும் அந்த உழைப்புக்கேற்ற பலனையும் பெறுவார்கள். தொழில் ரீதியாக உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நிதி நிலை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கலாம். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications