Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. எனவே சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் 12 கிரகங்களையும் அவை ஆட்சி செய்யும் ராசிகளையும் பாதிக்கும். தற்போது சூரியன் துலாம் ராசியில் இருக்கிறார். துலாம் ராசியை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். ஜோதிடத்தின் படி, சுக்கிரனும் சூரியனும் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள்.
நவம்பர் 16 ஆம் ஆதி சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விருச்சிகம் போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறது. செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ராசிகளில் சூரியனின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சூரியன் விருச்சிக ராசியில் நுழைவதால் அதிர்ஷ்டமடையும் ராசிகளில் ஒன்று மேஷம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வீட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த முடியும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய வியாபாரத்தைத் தொடங்கலாம். இது அவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். ஏற்கனவே உள்ள கடன் மற்றும் வீட்டுக்கடனை அடைக்க வழிபிறக்கும். பாதியில் நின்ற வீட்டு வேலைகளை மீண்டும் தொடங்கலாம்.
திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் வங்கி சேமிப்பு வெகுவாக அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகுந்த நற்பலன்களை அளிக்கும். உறவினர்களிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெறலாம். தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை புதிய பிரதேசங்களில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சரியான நேரம்.
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த பல உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் புதிய வேலை கிடைக்கும். உங்கள் திறமையால் அதிக பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் காண்பீர்கள்.
தனுசு
சூரியனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும். தற்போது இருப்பதை விட சிறந்த புதிய வேலை கிடைக்கலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல நாட்கள் வரும். பெயரும் புகழும் உயரும். பெரும்பாலான மக்கள் அவர்களின் தேவைக்காக உங்களை அணுகுவார்கள்.
பணியிடத்தில் உங்களின் திறமை அனைவராலும் பாராட்டப்படும், பல அங்கீகாரங்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். வியாபரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்தி பெரிய லாபத்தைப் பெறலாம். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு வானிலை மாற்றத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பெரிய சாதனையை அடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

