Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய பெயர்ச்சியால் இந்த 5 நட்சத்திரக்காரங்க பணப் பிரச்சனையை சந்திக்கப் போறாங்க.. உஷாரா இருங்க..
Sun Transit In Sagittarius On 15 December 2024: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் பூமியிலும், மனித வாழ்க்கையிலும் நன்கு தெரியும். அதுவும் கிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார்.
இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். மேலும் ஒவ்வொரு முறை சூரியன் ராசியை மாற்றும் போதும் தமிழ் மாதங்கள் பிறக்கும். தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். சூரியன் தனுசு ராசிக்கு செல்வதால் மார்கழி மாதம் பிறக்கவுள்ளது. இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
முக்கியமாக ஒவ்வொரு நட்சத்திரத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் நன்கு தெரியும். அதில் சில நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும், இழப்புக்களையும் தரலாம். இப்போது தனுசு ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மோசமாக பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரேவதி
சூரிய பெயர்ச்சியால் ரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பலவிதமான துன்பங்களை சந்திக்க நேரிடும். கையில் இருக்கும் பணம் நீர் போன்று செலவாகும். இதனால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். பணிபுரிபவர்கள் சம்பள பிரச்சனைகளை சந்திக்கலாம். வருமானத்தில் குறைவு ஏற்படலாம். பணிபுரிபவர்கள் அவசரப்பட்டு வேலையை விடுவதைத் தவிர்க்க வேண்டும். பின் வேலை கிடைக்காமல் போய்விடும். மேலும் இக்காலத்தில் அதிக பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சித்திரை
சூரிய பெயர்ச்சியால் சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் பண இழப்புக்களை சந்திக்கலாம். தேவையில்லாத செலவுகளை செய்து, கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். மனம் நிம்மதியின்றி இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வோர் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் சொத்து மற்றும் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும்.
மகம்
சூரிய பெயர்ச்சியால் மக நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க முடியாது. தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும்.
திருவாதிரை
தனுசு ராசிக்கு செல்லும் சூரியனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பண பிரச்சனையால் சிரமப்பட நேரிடும். திட்டமிட்ட வேலைகள் நடக்காமல் போகலாம். மன உளைச்சல் அதிகரிக்கலாம். நிதி தொடர்பாக மேற்கொள்ளும் பல விஷயங்கள் தோல்வியடையும். எதிலும் வெற்றி பெற முடியாமல் தோல்வியைப் பெறக்கூடும். முக்கியமான வேலைக்காக கடனுக்கு விண்ணப்பித்திருந்தால், அதைப் பெற முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.
சுவாதி
சூரிய பெயர்ச்சியால் சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். யாருடன் பேசும் போதும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
