Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறபோகுது.. உங்க ராசிக்கு எப்படின்னு பாருங்க
Sun Transit In Sagittarius On 15 December 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் டிசம்பர் 15 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்லவிருக்கிறார். சூரியன் தனுசு ராசிக்கு நுழைவதால், தமிழ் மாதமான மார்கழி மாதம் பிறக்கிறது.
இந்த சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள மார்கழி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒருசில மாற்றங்கள் ஏற்படும். அதில் சிலருக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மார்கழி மாதம் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் அதரவு கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் தந்தையின் ஆரேக்கியம் மோசமடையும் வாய்ப்புள்ளதால், அவரை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். உடன் பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்களின் வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பது நல்லது. தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை வெளியில் தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். பழைய பிரச்சனைகள் தீர்க்கப்படும். வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பி முயற்சித்தால், நல்ல பலன்களைப் பெறலாம். தேவையில்லாத அலைச்சல் இருக்கும். கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக பணத்தை யாருக்கும் கடன் கொடுத்தால், நிதி இழப்பு ஏற்படலாம். சமூக அந்தஸ்து உயரும்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். கடன் வாங்க விரும்புவோர் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து கெட்ட செய்திகளை பெற வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கௌரவம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுமாராகவே இருக்கும். பணியிடத்திலும் குடும்ப விஷயங்களிலும் பிரச்சனைகள் இருக்கும். ஆனால் சூழ்நிலையை புத்திசாலித்தனமாக கையாள்வீர்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்களோ, அவ்வளவு சிறப்பான பலனைப் பெறுவார்கள். கடின உழைப்பை தொடர்ந்தால், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நன்கு சிந்திக்கும் உத்தி பணியிடத்தில் பயனுள்ளதாக இருக்கும். தைரியத்தின் வலிமையால், கடினமான சூழ்நிலைகளிலும் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பல முக்கியமான வேலைகள் முடிவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை வலுவாக இருக்கும். தொழிலில் பல வெற்றிகள் கிடைக்கும். உங்கள் தைரியம் அதிகரித்து, உங்கள் அந்தஸ்தும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணிகள் பாராட்டப்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய அலைச்சலை சந்திப்பிர்கள். பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுற்றியிருப்பவர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். காதல் தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். இதனால் காதலிப்பவர்களிடையே பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை நிறைய முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நற்செய்திகளைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications