Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையில் உச்சத்தை அடையப்போகும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் மற்ற கிரகங்களைப் போலவே கிரகங்களின் அதிபதியான சூரியனும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சூரியன் தற்போது மூல நட்சத்திரத்தில் இருக்கிறார், மேலும் 29 டிசம்பர் 2024 அன்று, சூரியன் நள்ளிரவு 12:34 மணிக்கு பூராடம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார். சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவதால், சில ராசிகளில் பிறந்தவர்கள் மகத்தான நன்மைகளைப் பெறுவார்கள், அதேசமயம் சில ராசிக்காரர்கள் தனித்துவமான பிரச்சினைகளை சந்திக்கபோகிறார்கள். இந்த பதிவில் சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
பூராட நட்சத்திரத்தில் சூரியனின் பிரவேசம் மற்றும் ராசியின் ஒன்பதாம் வீட்டில், அதாவது அதிர்ஷ்ட வீட்டில் அமைந்திருப்பது, மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை வழங்குகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகளை மீண்டும் தொடங்கலாம். வேலை அல்லது வியாபாரம் குறித்து நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த சூரியனின் சஞ்சாரத்தால் வியாபாரிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையாப் பொறுத்தவரை, அவர்கள் பணம் சம்பாதிக்க ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் உழைப்பிற்கான முழு பலன்களைப் பெறுவார்கள் மற்றும் ஒரு பெரிய தொகையை சேமிக்க முடியும். அவர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டமானதாக அமையும். இதன் காரணமாக, அவர்களின் முயற்சிகள் சிறந்த பலனைத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இந்த காலகட்டத்தில் மீண்டும் தொடங்கலாம். அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நிலையான மற்றும் நீண்ட கால உறவுகளை நிறுவ முடியும்.
அவர்களின் தொழிலில், பதவி உயர்வு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் அனுகூலமான ஒப்பந்தங்கள் மூலம் அதிக லாபம் பெறலாம். நிதி நிலையைப் பொறுத்தவரை, மிதுன ராசிக்காரர்கள் சிறந்த திட்டமிடலுடன் அதிக பணத்தை சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். தங்கள் துணையுடன் நீண்ட தூரம் உல்லாசப்பயணம் செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியன் இருப்பதால், இந்த ராசியின் சொந்தக்காரர்கள் பயணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் மூலம் நல்ல தொகையை சம்பாதிக்கலாம். விருச்சிக ராசிக்காரர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் சிறந்த பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் வணிர்கள் புதிய வியாபாரம் அல்லது ஒப்பந்தங்களில் நுழைவது குறித்து திட்டமிடலாம் மற்றும் அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவர்களுக்கு பணியிடத்தில் நற்பெயரைப் பெற்றுத் தரும். இது தவிர, விருச்சிக ராசிக்காரர்கள் பல்வேறு திட்டங்களின் மூலம் வெற்றியடைவார்கள் மற்றும் அவர்களது ஈடுபாடுகள் சிறப்பான பலனைத் தரும். விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
