Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சூரிய பெயர்ச்சியால் மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கப்போகுது...
Sun Transit In Pisces On 15 March 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு மாற்றும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிம் தெரியும்.
அந்த வகையில், வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

தற்போது சூரியன் சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். மீன ராசிக்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு, சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இப்போது மீன ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிலர் புதிய வாகனத்தை வாங்கலாம். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தாயுடனான உறவு வழக்கத்தை விட வலுவாகும். சூரியனின் ஆசியால் தலைமைப்பண்புகள் மேம்படும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பெரிதும் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications