Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சூரிய பெயர்ச்சியால் இன்னும் 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட போகுது..
Sun Transit In Libra On 17 October 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரிய பகவான். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்லவுள்ளார். துலாம் ராசியானது சுக்கிரனின் ராசியாகும். இந்த துலாம் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு சூரியனின் ஆசியால் தொழில மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது துலாம் ராசிக்கு செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறப் போகிறார்கள். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். மேலும் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் பணியிடத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும் மற்றும் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆளுமை மேம்படும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், அதற்கான வாய்ப்புக்ளும் கிடைக்கும். குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் போட்டி தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
