சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Sun Transit In Libra Make Trigrahi Yog 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியில் சூரியன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரனும், புதனும் இருப்பதால், இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

Sun Transit In Libra Make Trigrahi Yog 2026 List Of Lucky Zodiac Signs

ஜோதிடத்தின் படி, இந்த யோகமானது மங்களகரமான யோகங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தொழிலில் முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் உண்டாக்கும். கூடுதலாக, வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். இப்போது சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலைகளில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் விரும்பிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. மாணவர்களின் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் புதிய வாய்ப்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். பரஸ்பர நம்பிக்கையும் நெருக்கமும் வளரும். உங்கள் காதல் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 1, 2026, 23:45 [IST]
Desktop Bottom Promotion