Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
சூரியன் துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் அடுத்த 1 மாசத்துக்கு சந்தோஷமாக இருக்கப்போறாங்களாம்...!
கிரகங்களின் அதிபதியான சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் சிலர் இதுவரை அனுபவித்த பல இன்னல்கள் நீங்கப் போகிறது. வியாபாரம், உடல்நலம் மற்றும் படிப்பு மற்றும் நிதி விஷயங்களில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள். இதனால் அடுத்த 30 நாட்கள் அவர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு சூரியனின் பாதை மாறுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். அரசிடம் இருந்து நீங்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பல பகுதிகளில் இருந்து எதிர்பாராத வகையில் பணம் வரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வேலை செய்யுமிடத்தில் உங்களின் அதிகாரமும், சுதந்திரமும் அதிகரிக்கும். அதேபோல வியாபாரத்தில் இருப்பவர்கள் இப்போது அதிக லாபம் ஈட்டலாம். குறிப்பாக, இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்களில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சூரிய பகவான் அருளால் திருமண காரியங்கள் நன்றாக நடக்கும்.
மிதுனம்
சூரியன் துலாம் ராசிக்குச் செல்வதால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருக்கும் பல பிரச்சினைகள் நீங்கும். அடுத்த 30 நாட்களில் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் பல முதலீடுகள் உங்களுக்கு லாபம் அளிக்கும்.
அதேபோல, குழந்தைகளின் வளர்ச்சியைப் பார்த்தப் பெருமை கொள்ளலாம். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாப்புள்ளது. வேலையில் நீங்கள் எதிர்பார்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட பல பிரச்சனைகள் தீரும்.
துலாம்
சூரியனின் போக்கில் ஏற்படும் இந்த மாற்றம் துலாம் ராசியினருக்கு அதிக நற்பலன்களைத் தரப் போகிறது. இதுநாள் வரை செய்யாத பல சாகச காரியங்களைச் செய்யும் தைரியத்தைப் பெறுவார்கள். இது நிதி ஆதாயத்திற்கு வழிவகுக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதேபோல தற்போது செய்யும் வியாபாரமும் நல்ல லாபத்தைக் கொடுக்கும், நஷ்டத்தில் இருந்த பல தொழில்கள் லாபகரமாக மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் மற்றும் குடும்பத்தின் சேமிப்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்த 30 நாட்கள் சாதனைகளின் காலமாக இருக்கும். விரும்பிய வாகனத்தை சொந்தமாக்க வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரும். சொத்து பிரிவினால் உங்களுக்கு நல்ல பங்கு கிடைக்கும்.
குழந்தைகளின் பெயரில் பணத்தை டெபாசிட் செய்யலாம். தங்கம் வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உங்களின் பல லட்சியங்கள் இப்போது நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
