Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
சூரிய பெயர்ச்சியால் ஏப்ரல் 14 முதல் இந்த 5 ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Aries On 14 April 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சூரியன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன், தனது உச்ச ராசியான மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.
சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதுவும் சூரியன் மேஷ ராசியில் நுழைவதால் தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

அதுவும் வீடு மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனையும், லாபத்தையும் பெறக்கூடும். இப்போது சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஏனெனில் இந்த 9 ஆம் வீடு அதிர்ஷ்ட வீடு ஆகும். இதன் காரணமாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும். இதன் மூலம் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடைந்து, நிதி நிலையில் நல்ல உயர்வை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகள் அல்லது போட்டியாளர்களை எளிதில் வெற்றி பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். கையில் பணம் அதிகம் புரளும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications