Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
18 ஆண்டுகள் கழித்து மீனத்தில் நிகழும் ராகு சூரிய சேர்க்கை: இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழை கொட்டும்..
Sun Rahu Conjunction In Pisces After 18 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும். அதில் சில கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். இவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி சூரியன் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் மார்ச் 14 ஆம் தேதியில் இருந்து ராகு சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த கிரக சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நிகழவுள்ளது. இதனால் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. மேலும் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையிலும், தொழில் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது.
இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நிகழும் ராகு சூரியனின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த மாதிரியான நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதையும் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சமும் மார்ச் 14 முதல் அதிகரிக்கும். தொழிலில் இருக்கும் எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். நிதி நிலை மேம்படும். புதிய வேலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் எழும் மற்றும் அதை முயற்சித்தால் அதில் வெற்றியும் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் அந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் தங்கள் வேலைகளை திறம்பட செய்து முடிப்பார்கள். இதன் மூலம் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள் மற்றும் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உறவினர்களுடனான உறவு மேம்படும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க நேரிடும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
