Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சூரியன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது..
Sun Nakshatra Transit On 20 July 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.
அதே சமயம் சூரியன் ஜூலை 20 ஆம் தேதி, அதாவது இன்று நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதுவும் சூரியன் பூசம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானும் சூரியனும் எதிரிகளாக கருதப்பட்டாலும், தந்தை மகனாவர். அதுவும் சூரியன் சனி பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்படி அதிர்ஷ்டம் பிரகாசிப்பதால், வெற்றிகளும், செல்வமும் குவியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது சூரியன் பூசம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம ஏற்படும். ஊடகம், தகவல் தொடர்பு, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் பெரிய அளவில் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமாக தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீதிமன்ற விவகாரங்களில் வெற்றிகள் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக பெரிய ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
