Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சூரிய சந்திர சேர்க்கையால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Sun Moon Conjunction In Aries On 27 April 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி, அதாவது இன்று சந்திரனும் மேஷ ராசியில் நுழைந்துள்ளார். இதனால் மேஷ ராசியில் சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது.
ஏற்கனவே சூரியன் வலிமையான ஆற்றலை கொண்டிருக்கும். இந்த சேர்க்கையால் சந்திரனுடன் சேர்ந்து சூரியன் இன்னும் ஆற்றல் மிக்க சூழலை உருவாக்கும். இந்த சூரிய சந்திரனின் சேர்க்கை அடுத்த 2 1/2 நாட்கள் வரை இருக்கும். இதனால் இந்த சேர்க்கையின் தாக்கம் அடுத்த சில நாட்கள் இருக்கும்.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தரும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழிலில் மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது சூரிய சந்திர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சூரிய சந்திர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையை தொடங்கியிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். இலக்குகளை நன்கு புரிந்து, திறம்பட திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். தம்பதிகளிடையே பரஸ்பர புரிதல் மேம்படும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் பேச்சும், நடத்தையும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் இருக்கும். மார்கெட்டிங், ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் பெரும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. புதிய தொடர்புகளால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் தங்களின் முழு திறமைகளையும் காட்டி வெற்றி பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மொத்தத்தில் உங்களின் செயல் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
