Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
டிசம்பர் இறுதியில் சூரியன், செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: புத்தாண்டு இந்த 3 ராசிக்கு செமயா இருக்கபோகுது!
Sun Mars Made Shadashtak Yog 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு அவ்வப்போது கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களையும் உருவாக்கி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுவும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதே சமயம் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் சூரியனும், செவ்வாயும் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ஷடாஷ்டக யோகமானது மிகவும் மோசமான யோகமாக கருதப்படுகிறது.

இருப்பினும் செவ்வாயும், சூரியனும் நண்பர்கள் என்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது செவ்வாய் சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
டிசம்பர் இறுதியில் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால், கும்ப ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் முக்கிய முடிவால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.
கடகம்
ஷடாஷ்டக யோகத்தால் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக வேலை தேடி கிடைக்காமல் இருந்தால், இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
சூரியன் செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இது தவிர எதிர்பாராத பல நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகளுக்கு சூரியனின் அருளால் நிறைய லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆயினும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கண் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது குணமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications