Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
5 ஆண்டுகள் கழித்து உருவாகவுள்ள சுக்ராதித்ய யோகம்: ஜூலையில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது
Sukraditya Yog 2024 In Cancer After 5 Years: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களையும் உருவாக்கும். அவ்வாறும் உருவாக்கும் யோகங்கள் மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் ஜூலை மாதத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், கடக ராசியில் நுழையவுள்ளார். அதே சமயம் அசுரர்களின் தலைவனாக கருதப்படும் சுக்கிரனும் கடக ராசியில் நுழையவுள்ளார். இவ்விரு கிரகங்களும் கடக ராசியில் ஒன்றிணைவதால் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது கடக ராசியில் உருவாகவுள்ள சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகிறது. புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரம் மற்றும் பங்குச் சந்தையில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன்கள் அதிகரிக்கும். மேலும் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். அனைத்து முக்கியமான வேலைகளும் நல்லபடியாக முடிவடையும். கூட்டு வேலைகளில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்தினால், நல்ல வெற்றியைப் பெறுவதோடு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெற வாய்ப்புள்ளது. வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல வேலை தேடி வரும். தொழிலதிபராக இருந்தால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications