Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
12 மாதம் கழித்து கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Sukraditya Rajyog In Aquarius On February 2026: ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களுள் ஒன்று தான் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களையும் உருவாக்கும். அந்த வகையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி, அதாவது இன்று கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த கும்ப ராசியில் ஏற்கனவே புதன், ராகு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் உள்ளன. இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. அதோடு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

இப்படிப்பட்ட சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து பயணிக்கும் போது சக்தி வாய்ந்த மற்றும் மங்களகரமான சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் கும்ப ராசியில் சுமார் 12 மாதங்கள் கழித்து உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் 4 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் பெறவுள்ளனர். இப்போது சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தால் தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பு பாராட்டப்படலாம். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். உங்களின் இலக்குகளை அடைவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வெற்றிகள் குவியும். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



