Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.. உஷார்..
Solar Eclipse 2025: இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது புரட்டாசி மாத அமாவாசை நாளில், அதாவது மகாளய அமாவாசையில் நிகழ்கிறது. ஜோதிடத்தின் படி, புரட்டாசி அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பருகிறது.
அதுவும் இந்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஒரு பகுதி கிரகணமாக இருக்கும் மற்றும் இது இந்தியாவில் தெரியாது. மேலும் ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஆண்டின் கடைசி சூரிய கிரகணமானது கன்னி ராசியில், உத்திரம் நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணத்தால் பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கிரகணத்தால் பண இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே இக்காலத்தில் நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டு சூழல் அமைதியின்றி இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணத்தால் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று எதிர்பாராத அளவில் செலவுகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் ஒன்றிற்கு பலமுறை யோசித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். மேலும் இக்காலத்தில் மிகுந்த மன அழுத்தத்தையும், சோர்வையும் சந்திக்க நேரிடும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தியானத்தில் ஈடுபடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது அவ்வளவு சிறப்பான பலன்களைத் தராது. வேலையில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பும் நன்கு சிந்திக்க வேண்டும். அவசரமாக எடுக்கும் முடிவுகள் பெரிய அளவில் இழப்புக்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications