Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் 6 கிரகங்களால் உருவாகியுள்ள பாதக யோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Six Planets Make Pataka Yog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தனது நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த கிரகங்கள் வானில் தென்பட்டு நமது கண்களுக்கும் தெரியும். அவ்வாறு 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஒரு அபூர்வமான நிகழ்வு வானில் நிகழ்ந்துள்ளன. அதாவது வானில் 6 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக தெரிந்தன.
முக்கியமாக இப்படி கிரகங்கள் பிப்ரவரி 26 ம் தேதி வரை நேர்க்கோட்டில் அணிவகுத்து இருக்கும். அந்த 6 கிரகங்களாவன செவ்வாய், குரு, வீனஸ், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்றவை. இதில் செவ்வாய், குரு, வீனஸ், சனி ஆகிய கிரகங்களை கண்களால் காண முடியும். மீதமுள்ள யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றை தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே காண முடியும். இப்படி கிரகங்கள் வரிசையாக இருப்பதால், பாதக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 6 கிரகங்கள் வரிசையாக நேர்கோட்டில் இருப்பதால் உருவாகியுள்ள பாதக யோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
பாதக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
பாதக யோகத்தால் மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகள் குறையும்.
வேலை தேடுபவர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பாதக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
பாதக யோகத்தால் கடகம், விருச்சிகம், மீனம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். வருமானம் சற்று குறையும். தேவையில்லாத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய அளவில் பண இழப்பை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தனுசு, சிம்மம், துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஓரளவு சுமாராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
