Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
ஷஷி ஆதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்கு பணம் குவியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Shashi Aditya Rajyog Formed On 24 June 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களில் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சந்திரன் ஜூன் 24 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். அவ்வாறு சந்திரன் மிதுன ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சூரியன் இருக்கும். இதனால் சூரியன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் ஷஷி ஆதித்ய ராஜயோகம் உருவாகும்.

இவ்வாறு உருவாகும் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதோடு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது ஷஷி ஆதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் ஷஷி ஆதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். எழுத்து, கலை தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் ஷஷி ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணக்கூடும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்லைன் தொடர்பான செயல்பாடுகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் ஷஷி ஆதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் வாழ்க்கையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். காதல் உறவுகள் வலுவடையும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் படைப்பாற்றல் திறன் நல்ல பலனைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
