Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
சனிபகவான் உருவாக்கும் ஷச ராஜயோகத்தால் இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராசி மற்றும் நட்சத்திரங்களில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினகளையும் பாதிக்கிறது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜயோகங்களில் முக்கியமான ஷச மஹாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. ஷச மஹாபுருஷ யுகம் உருவாகக் காரணம் கும்பத்தில் சனிபகவானின் சஞ்சாரமாகும். இது அனைத்து நட்சத்திரங்களிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தினாலும், சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக பலன்களைப் பெறப்போகிறார்கள்.

இந்த ராஜயோகம் அக்டோபர் 31 அன்று அதாவது தீபாவளி அன்று உருவாகிறது. இதன் விளைவாக, உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் ஷச மஹாபுருஷ ராஜயோகம் சாதகமான மாற்றங்களை மட்டுமே தருகிறது. குறிப்பாக சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சசமஹா புருஷ ராஜயோகம் அவர்கள் எதிர்பார்த்ததை விட பலன்களைத் தரும். அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ஷச மஹாபுருஷ யோகத்தின் காரணமாக சனிபகவானின் பூரண ஆசீர்வாதங்களை பெறப்போகிறார்கள். சனிபகவான் ஒரு கோபக்கார கிரகமாக கருதப்பட்டாலும், இந்த யோகத்தால் நல்ல பலன்களை வழங்குகிறார், இந்த காலகட்டத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை மாறப்போகிறது.
நிலுவையில் உள்ள பல பணிகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபத்தை பெற முடியும். புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் வெற்றியை அடைய முடியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு இலாபகரமானதாக அமையம்.
திருவாதிரை
ஷச மஹாபுருஷ ராஜயோகம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல பலன்களைத் தருகிறது. வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என முன்னேற்றங்கள் உங்களைத் தேடிவரும் காலம் இது. திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், குழந்தை வரம் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம்.
ஆயில்யம்
ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு ஷச மஹாபுருஷ யோகம் அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுதலையாகும். இதன் விளைவாக, நீங்கள் உங்களை நீண்ட நாள் வாட்டி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராஜாவைப் போல வாழ்க்கையில் முன்னேறி மகிழ்ச்சியாக வாழலாம். திருமணம் செய்ய விரும்புவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் தேடிவரும். விரும்பிய சாதனைகளை முடிப்பதற்கான நேரம் இது.
புனர்பூசம்
ஷச மஹாபுருஷ ராஜயோகத்தால் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்தியான வாழ்க்கையை வாழ்வார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறும். அதிர்ஷ்டத்தின் முழுஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். அனைத்து வகையிலும் நீங்கள் முன்னேறுவதற்கான காலம் இது. உங்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். காதலில் இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி சிந்திக்க சரியான காலம் இது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
