Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பிப்ரவரி 02 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
Shani Transit In Pooratathi Nakshatra On February 2025: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 02 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைகிறார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான்.

இந்த குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழையும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. முக்கியமாக எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலைகள், பிப்ரவரி முதல் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், அது நிறைவேறும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் சனி பகவானின் ஆசியால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்திறனால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பிப்ரவரி முதல் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வைக் காணக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இதுவரை தொழிலில் இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications