Latest Updates
-
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள்
300 ஆண்டுகளாக கதவு, பூட்டு என்றால் என்னவென்றே தெரியாத அதிசய இந்திய கிராமம் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவின் முதுகெலும்பே கிராமம்தான் என்று கூறுவார்கள். இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தனித்துவமான மரபுகள், கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் வரலாற்று நடைமுறைகளைக் கொண்ட எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. இதில் சில கிராமங்கள் அவற்றின் கட்டிடக்கலை, வினோதமான சடங்குகள், திருவிழாக்கள் அல்லது மத முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றவையாக உள்ளன.

இந்தியாவின் சில கிராமங்கள் நம்ப முடியாத வழிமுறைகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம், அங்குள்ள வீடுகளிலும், கடைகளிலும் பாரம்பரியமாகக் கதவுகளோ அல்லது பூட்டுகளோ இல்லாத காரணத்தினால், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கதவுகள் இல்லாத கிராமம்
சனி ஷிங்னாபூர் என்பது கதவுகளே இல்லாத ஒரு அதிசய இந்திய கிராமமாகும். இந்த கிராமம், சனி பகவான் மீதான நம்பிக்கையாலும், சனிபகவான் இங்குள்ள வீடுகளை பாதுகாக்கிறார் என்ற தீவிர உறுதியால் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இங்கிருக்கும் பல வீடுகளிலும் கடைகளிலும், மரத்தாலான கதவுகளோ அல்லது பூட்டுகளோ இல்லாத நிலை பாரம்பரியமாகவே இருந்து வருகிறது.
இந்த கிராமத்தில் ஏன் வீடுகளுக்கு கதவு இல்லை?
இந்த கிராமத்தை சனி பகவான் காப்பதாகவும், தவறிழைப்பவர்களைத் தண்டிப்பதாகவும் இங்குள்ள மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இங்குள்ள குடும்பங்கள் தங்கள் வீடுகளில் கதவுகளையும், பூட்டுகளையும் பயன்படுத்துவத்தை பல நூற்றாண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இந்த பாரம்பரியமே இந்த கிராமத்திற்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்துள்ளது.
புகழ்பெற்ற சனி ஆலயம்
சனி ஷிங்னாபூர் ஆலயம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்து புராணங்களின்படி, நீதி மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடையவரான சனி பகவானுக்காகவே இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்திலுள்ள சனிபகவானை வழிபட வருகைத் தருகிறார்கள்.
சனி ஷிங்னாபூரில் சுற்றுலா
இந்த கிராமத்திலுள்ள தனித்துவமான மரபுகளாலும், ஆன்மீக முக்கியத்துவத்தாலும், இந்த கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் யாத்திரைத் தலமாக மாறியுள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் ஆலயத்தைச் சுற்றிப் பார்ப்பதுடன், இந்த கிராமத்தின் உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் தெறிந்து கொள்கிறார்கள்.
தனித்துவமான சடங்குகளும், வழிமுறைகளும்
இந்த கோவில், தனித்துவமாக அடையாளப்படுத்தும் வகையிலான தனித்துவமான சடங்குகளைப் பின்பற்றுகிறது. ஆண் பக்தர்கள் பிரார்த்தனை செய்வதற்கு முன் புனித நீராடி, ஈர ஆடைகளை மட்டுமே அணிந்து உள்ளே வர வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபுகள், கோவிலை உண்மையிலேயே தனித்துவமிக்கதாக ஆக்குகின்றன.
சுயம்பு சிலை
இந்த கோவிலுள்ள சனி பகவானின் திருவுருவம் 'சுயம்பு' என்று போற்றப்படுகிறது. செவிவழிச் செய்திகளின்படி, ஒரு இடையர் ஒருவர் இந்த கருங்கல்லைக் கண்டெடுத்தார், அவர் ஒரு கோலால் அக்கல்லைத் தொட்டபோது, அதிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அந்த கல்லே சனி பகவான் என்று உறுதியாக நம்பிய கிராம மக்கள், அதனை ஒரு தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
