Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
செவ்வாய் மற்றும் ராகு உருவாக்கும் சடாஷ்டக யோகத்தால் பேரழிவுகளை சந்திக்க போகும் 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
கிரகங்களின் தளபதியான செவ்வாய், தற்போது அவரது பலவீனமான ராசியான கடகத்தில் நிலைபெற்றுள்ளார், மேலும் ஜூன் 07, 2025 வரை, இந்த ராசியிலேயே இருப்பார். அதேசமயம் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, மே 18 அன்று தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதனால் செவ்வாய் மற்றும் ராகு சடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த அசுப யோகம் மே 18 முதல் ஜூன் 07 வரை உருவாகிறது.
இந்த அசுப யோகத்தால் 19 நாட்களுக்கு, சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அசுப சடாஷ்டக யோகத்தால் இன்னல்களை சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்
சடாஷ்டக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாய் சிம்ம ராசியின் பன்னிரண்டாவது வீட்டிலும், ராகு ஏழாவது வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இந்த சூழ்நிலையால், சிம்ம ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு
சடாஷ்டக யோகம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. குடும்பத்தின ரிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் அவர்கள் வெளிநாட்டு தொடர்பான வேலைகள் அல்லது வணிகங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கும் இந்த காலம் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், வேறு எந்த இடத்திற்கும் பயணம் செய்வதற்கு முன்பு நன்றாக சிந்திக்க வேண்டும். உங்கள் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சடாஷ்டக யோகம் காரணமாக கடினமான சூழ்நிலைகளை சந்திக்கப் போகிறார்கள். ராகு இந்த ராசியின் இரண்டாவது வீட்டில் அமர்கிறார், செவ்வாய் மீன ராசியின் ஐந்தாவது வீட்டில் அமர்கிறார். இந்த அசுப யோகத்தால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் மற்றும் லாப வாய்ப்புகள் கணிசமாகக் குறையும்.
எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சில மோசடிகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் பல ஆபத்துகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

