Latest Updates
-
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
அடுத்தடுத்து 4 முறை நிலையை மாற்றும் சனி பகவான்: ஜூலை முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
Saturn Transit 2026: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதியின் கடவுகளாக கருதப்படுகிறார். மேலும் நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதுமட்டுமின்றி அவ்வப்போது சனி பகவான் தனது நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார்.

அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை சனி பகவானின் நிலையில் 4 முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்படி சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்போது ஜூலை முதல் டிசம்பர் வரை எப்போதெல்லாம் சனியின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகிறது என்பதையும், அதனால் அதிஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும் காண்போம்.
ஜூலை 2, 2026 - இந்நாளில் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன்.
ஜூலை 27, 2026 - இந்நாளில் சனி பகவான் மீன ராசியில் தனது வக்ர பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் சுமார் 138 நாட்கள் வரை இருப்பார். இக்காலத்தில் சனியின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
அக்டோபர் 9, 2026 - இந்நாளில் சனி பகவான் வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து திரும்பி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.
டிசம்பர் 11, 2026 - இந்நாளில் சனி பகவானின் வக்ர பயணம் முடிவுக்கு வந்து, வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் மீண்டும் பயணிக்கவுள்ளார். இதனால் இதுவரை சனியால் தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மிதுனம்
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கை வரும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வணிகர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறந்ததாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். பணப்பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
ரிஷபம்
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
துலாம்
சனி பகவானின் இந்த நிலை மாற்றங்களால் துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றியும், நிதி நன்மைகளும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




