Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: 2025-ன் தொடக்கம் இந்த 3 ராசிக்கு செம சூப்பரா இருக்கப்போகுது
Saturn Venus Conjunction: வேத ஜோதிடத்தில், ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அளிக்கக்கூடியவர் தான் சனி பகவான். இதனாலேயே இவரை நீதிமான் என்று அழைப்பர். கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். எனவே சனியின் நிலையில் ஏற்படும் சிறு மாற்றமும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் டிசம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் இருக்கும் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே கும்பத்தில் சனி இருப்பதால், சுக்கிரனின் வருகையால், கும்ப ராசியில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.

ஜோதிடத்தில் சனிக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு உள்ளது. எனவே இந்த சேர்க்கையானது மிகவும் மங்களகரமானது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கை மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த சேர்க்கை நிகழ்வதால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அருமையாக, அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி, சுக்கிர சேர்க்கையானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கை 11 ஆவது வீட்டில் நிகழ்வதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. தொழில் ரிதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் சமூகத்தில் உயரும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தலைமைப்பண்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புளளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
