Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: 2025-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Saturn Venus Conjunction in Aquarius 2024: இந்த ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணித்து, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜோதிடத்தில் சனி மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நீதிமான் சனியுடன், செல்வத்தின் காரணியான சுக்கிரன் ஒன்றிணையும் போது, சில ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதோடு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண வாய்ப்புள்ளது. அதுவும் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் டிசம்பர் மாத இறுதியில் நிகழவுள்ளது.

இதனால் வருகிற 2025 புத்தாண்டின் தொடக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக, நிதி நிலையில் உயர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது கும்பத்தில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படப்போகிறது. தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கக்கூடும். இக்காலகட்டத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பங்குச்சந்தை மூலம் நிறைய லாபத்தை பெறும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு வெற்றிகளும், பாராட்டுக்களும் குவியும்.
வேலை தொடர்பான பயணங்களை நிறைய மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் பயனுள்ளதாகவும் இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதைப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையே மாறிவிடும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு, இந்த கிரக சேர்க்கை காலத்தில் நல்ல வரன் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
