Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ஆண்டின் இறுதியில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு 2025-ன் தொடக்கத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Saturn Venus Conjunction In Aquarius 2024 In Tamil: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அந்நபர் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்று வாழ்வார்.
அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஒருவரது நிதி நிலையிலும் அதன் தாக்கம் தெரியும். ஜோதிடத்தில் சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் சுக்கிரன் டிசம்பர் 28 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு செல்லவுள்ளார்.

இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஆண்டின் இறுதியில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்வதால், எந்த ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல துவக்கமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக பலவிதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும்.
புதிய வாகனம், புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும். வணிகர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் படிக்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
