Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
சனிப்பெயர்ச்சியும், சூரிய கிரகணமும் ஒரே நாளில் வருவதால் 2025-ல் ஜெயிக்கப் போற குதிரை இந்த 3 ராசிக்காரங்கதான்!
Saturn Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில், கிரக மாற்றங்களுக்கென்று பெரும் முக்கியத்துவம் உள்ளது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி நீதியின் கிரகமான சனிபகவான் மார்ச் 2025 இல் கும்ப ராசியை விட்டு மீன ராசிக்கு மாறுகிறார்.
அதே நாளில் பாதி சூரிய கிரகணமும் வரவிருக்கிறது. ஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் போன்ற ஏற்படுவது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது.

சனிபகவான் சூரிய குடும்பத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகும், மேலும் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குபவராக சனிபகவான் உள்ளார். 2025 மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி தொழில், நிதி, உடல்நலம் மற்றும் தொழில் வாழ்க்கை போன்ற துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் கலவையானது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பெரும் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்களின் முதலீடுகள் பெரும் லாபத்தை தரும். இந்த சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் போது வியாபாரிகளுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும்.
பணியில் இருப்பவர்கள் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதோடு அவர்களின் கடின உழைப்பால் பதவி உயர்வையும் அடையலாம். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற இது சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவர்களின் கடந்த கால நற்செயல்கள் இப்போது நல்ல பலன்களை கொடுக்கும்.
தனுசு
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கப்போகிறது. உங்களின் தடைப்பட்ட பணிகள் அனைத்தையும் சரியாக முடிக்க இதுவே சரியான நேரம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் மற்றும் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்டலாம். எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவை எதிர்பார்க்கலாம் மற்றும் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். அவர்களின் உறவுகள் நிலையானதாக இருக்கும் மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை விரைவில் சமாளிக்கலாம். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் இப்போது தீர்க்கப்பட்டு அவர்களுக்கு இப்போது லாபத்தைக் கொடுக்கும். வேலையில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள் மற்றும் அவர்களின் கடின உழைப்பால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
அவர்களின் நிதிநிலை அவர்களுடைய அனைத்து நிதி சிக்கல்களையும் தீர்க்கும். சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பொருத்தமான வேலையைப் பெறலாம். ஆன்மீகம் சார்ந்த பணிகளில் அவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் வாழ்க்கையில் அமைதி திரும்பும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

