Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் அடுத்த 2 1/2 வருஷம் எந்த ராசிக்கு எந்த சனி தொடங்கப்போகுது?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அந்த வகையில் சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் சனி பகவான் நுழைவதால் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியின் இருந்து விடுபடவுள்ளார். மேலும் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும் மற்றும் சனியின் பிடியிலும் சிக்கவுள்ளனர்.

பொதுவாக சனி இடம்பெயரும் போது அச்சம் எழும். ஏனெனில் சனி பகவான் ராசியை மாற்றும் போது, அவர் இருக்கும் நிலையைப் பொறுத்து ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி போன்றவை தொடங்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த சனி தொடங்கப்போகிறது மற்றும் அந்த சனியின் தாக்கத்தால் எத்தனை சதவீதம் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பதை இப்போது காண்போம்.
ஏழரை சனி
பொதுவாக ஏழரை சனியை மூன்று 2 1/2 ஆண்டுகளாக பிரிக்கலாம். அதில் முதல் இரண்டரை ஆண்டு காலத்தை விரைய சனி என்றும், இரண்டாவது இரண்டரை ஆண்டு காலத்தை ஜென்ம சனி என்றும், கடைசி இரண்டரை ஆண்டு காலத்தில் பாத சனி என்றும் அழைப்பர். கடந்த 2023 ஆம் ஆண்டில் நடந்த சனிப் பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும், மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியும் நடந்தது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு விரைய சனியும், மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும் தொடங்கவுள்ளது. மேலும் இந்த சனி பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடவுள்ளார்கள். இனி அடுத்த 7 1/2 ஆண்டு காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறவுள்ளது.
அஷ்டம சனி
ஒரு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி வரும் போது அஷ்டம சனியானது தொடங்கும். 2023-ல் நடந்த சனி பெயர்ச்சியால் கடக ராசிக்கு அஷ்டம சனி நடந்தது. இந்நிலையில் 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கப்போகிறது.
அர்த்தாஷ்டம சனி
ஒரு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி வரும் போது அர்த்தாஷ்டம சனியானது தொடங்கும். 2023-ல் நடந்த சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடந்தது. இந்நிலையில் 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கப்போகிறது.
கண்டக சனி
ஒரு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி வரும் போது கண்டக சனியானது தொடங்கும். 2023-ல் நடந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு கண்டக சனி நடந்தது. இந்நிலையில் 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டக சனி தொடங்கப்போகிறது.
இப்போது 2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த சனி தொடங்கப் போகிறது மற்றும் எந்த அளவு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் மேஷ ராசியின் 12 வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு விரைய சனி தொடங்கப்போகிறது. இந்த சனியால் 70 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனிபகவான் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு லாப சனி தொடங்கப் போகிறது. இந்த சனியால் 95 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு கர்ம சனி தொடங்கப்போகிறது. இந்த சனியால் 80 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடகம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனிபகவான் செல்லவுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்களுக்கு பாக்கிய சனி தொடங்கப்போகிறது. இந்த சனியால் 90 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளது. இந்த சனியால் சிம்ம ராசிக்காரர்கள் 76 சதவீத நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கன்னி
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவிருக்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டக சனி தொடங்குகிறது. இந்த சனியால் 70 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு ரோக சனி தொடங்கப் போகிறது. இந்த சனியால் 95 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பஞ்சம சனி தொடங்கப்போகிறது. இந்த சனியால் 91 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
தனுசு
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இந்த சனியால் 80 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
மகரம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடப் போகிறார்கள். இந்த சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு 92 சதவீதம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பாத சனி தொடங்கவுள்ளது. இந்த சனியால் 65 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீனம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்கப் போகிறது. இந்த சனியால் 50 சதவீத நல்ல பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் சனி பகவான் நுழைவதால் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியின் இருந்து விடுபடவுள்ளனர்.
2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் மகரம், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடவுள்ளனர். அதே சமயம் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கவுள்ளனர்.
ஒரு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி வரும் போது அஷ்டம சனியானது தொடங்கும். அதே சமயம் ஒரு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி வரும் போது அர்த்தாஷ்டம சனியானது தொடங்கும். 2025-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் தொடங்கும்.



Click it and Unblock the Notifications











