Latest Updates
-
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
2025 சனிப்பெயர்ச்சியால் கன்னி ராசிக்கு கண்டக சனி.. எந்த விஷயத்தில் கவனமா இருக்கணும் தெரியுமா?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசிமாற்றம் மார்ச் மாத இறுதியில் நிகழவுள்ளது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
சனி பகவான் வருகிற மார்ச் 29 ஆம் தேதி தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பயணம் செய்யப்போகும் சனிபகவானால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

கன்னி ராசிக்காரர்களே! சனிபகவான் கண்டச் சனியாக உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமரப்போவதால் வேலையில் பொறுப்பும், குடும்ப பாரமும் தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். பணியிடங்களில் பேசும் போது கவனம் தேவை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும்.
ஜாதகத்தில் 7 ஆம் இடம் களத்திர ஸ்தானம், நம்முடைய வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகளை குறிக்கும் இடம். அந்த இடத்தில் சனி பயணம் செய்வதால் கவனத்தோடும் நிதானமாகவும் இருக்க வேண்டும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும், திருமணம் நடைபெறும். உங்கள் செலவுகளைக் குறைத்து, சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கண்டச்சனியாக சஞ்சரிக்கும் காலம் பொன்னான காலம். முழு அதிகாரத்தையும் சனி பகவான் தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். இனி வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வதால் வீணான பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
வேலை மாற்றம் மற்றும் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும். பண விசயத்தில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை நம்பி அகலக்கால் வைக்காதீர்கள். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களின் பொருளாதார நிலை உச்சத்திற்கு செல்லும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும்.
அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை இது செழிப்பான காலம். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். அரசியல் மற்றும் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும். தொழில் அற்புதமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். வாகன பயணங்களில் கவனத்தோடும் நிதானமாகவும் செயல்படுவது அவசியம். விஷ பூச்சிகளிடம் கவனத்தோடு இருப்பது அவசியம். கண்டச்சனி காலத்தில் எதையும் கவனத்தோடு கையாளுங்கள்.
2025 சனிப்பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வது நன்மையை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications