Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சனி பெயர்ச்சி பலன் 2025 - அள்ளித் தரப்போகும் லாப சனி.. அனுபவிக்கத் தயாராகும் ரிஷப ராசிக்காரர்கள்..
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மார்ச் 29 ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானின் வீடான மீன ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் பல ராசிக்காரர்களை புதிய தொழிலை தொடங்க வைப்பார். தொழிலில் நல்ல லாபத்தை தருவார். வெளிநாடு சென்று பிசினஸ் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தரப்போகிறார். சனிபகவானின் பயணம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?

கால புருஷ தத்துவப் படி, 12 ஆம் வீடான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்யும் சனிபகவானால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
ரிஷபம் - 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகும் சனிபகவானால் தொட்டது துலங்கப் போகிறது. நீங்கள் செய்யும் பிசினஸ் உங்களுக்கு நல்ல லாபத்தை தரப்போகிறது. பொன்னான ஆண்டாகவும் தொழிலில் லாபங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக அமையப் போகிறது. எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ், கடல் கடந்து சென்று பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதங்களை தரப்போகிறது.
தொழில் வாழ்க்கை
சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப் போகிறார். உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடு மற்றும் ராசிக்கு 8 ஆம் வீடுகளின் மீது சனிபகவானின் பார்வை விழுவதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கப் போகிறது. சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் தொடங்க சாதகமான நேரமிது.
எதையும் சமாளித்து தொழிலில் முன்னேற்றம் அடைய சாதகமான நேரம் இது. சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கைக்கூடி வரப்போகிறது.
சனி பகவான் உங்களுக்கு தொழில் ஸ்தான அதிபதியாக இருப்பவர். லாப வீட்டில் பயணம் செய்யப் போகும் சனிபகவானால் உங்களுக்கு நல்ல தொழில் அமையும். வியாபாரம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான முன்னேற்றத்தை தரும். தேவையில்லாமல் பட்ட கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
நிதி நிலை
ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். உங்களுடைய நிதி நிலைமை ரொம்பவும் அற்புதமாக இருக்கும். லாப வீட்டில் உள்ள சனிபகவான் 5 ஆம் வீட்டினையும் எட்டாம் வீட்டினையும் பார்க்கிறார். பங்குதாரர்களால் லாபம் கிடைக்கும். சனி உங்களுடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் உங்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான பலன்களை தொழில் மூலம் சனிபகவான் தரப்போகிறார். ஆண்டு முழுக்க உங்களுக்கு லாபம் கொட்டப்போகிறது. ஏற்றுமதி, இறக்குமதி மூலமும் வருமானம் கிடைக்கும்.
சனி லாப வீட்டில் அமைந்து தனது பார்வையால் முக்கியமான இடங்களை பார்ப்பதால் பெண்களுக்கும் பிசினஸ் செய்யும் யோகம் வரும். பெண் தொழில் முனைவோர்களை சனிபகவான் உருவாக்குவார். ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவார். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் தொடங்கி லாபம் கிடைக்கப் போகும் ஆண்டாக அமைந்துள்ளது
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருப்பார்.
2025 சனிப்பெயர்ச்சியால் சனி ரிஷப ராசியின் லாப வீட்டில் அமைந்து தனது பார்வையால் முக்கியமான இடங்களை பார்ப்பதால் பெண்களுக்கு பிசினஸ் செய்யும் யோகம் வரும். பெண் தொழில் முனைவோர்களை சனிபகவான் உருவாக்குவார். ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவார். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் தொடங்கி லாபம் கிடைக்கப் போகும் ஆண்டாக அமையும்.
2025 ஆம் ஆண்டின் சனிபெயர்ச்சிக்கு பின் மேஷம், மீனம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியாலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியாலும், தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாலும் சிக்கவுள்ளனர்.



Click it and Unblock the Notifications