Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
2025 சனிப்பெயர்ச்சியால் கும்ப ராசிக்கு தொடங்கிய ஏழரை சனியின் கடைசி கட்டம்.. எதில் கவனமா இருக்கணும்?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசி மாற்றம் மார்ச் மாத இறுதியில் நடந்தது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். சனிபகவான் தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் ராசியான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணத்தை தொடங்கியுள்ளதால், சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. உங்கள் ராசி அதிபதியும் விரைய ஸ்தான அதிபதியுமான சனிபகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இது நாள் வரைக்கும் இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம். தலை மேல் அமர்ந்திருந்த ஜென்ம சனி விலகியுள்ளது. கடந்த 5 ஆண்டு காலம் தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள்.
இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். வலிகளை மட்டுமே கொடுத்து வந்த சனிபகவான் இனி பண வருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி முடியவில்லை என்றாலும் ஜென்ம சனி காலத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. அடுத்த இரண்டரை வருஷம் பாத சனி காலத்தில் சனி பகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு நிம்மதி தருவார்.
பாத சனி தொடங்குவதால் கவனம் தேவை. பாத சனி நடக்கும் போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது, ஓடுவது, வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். பாக்கெட் காலியாகும் காலம்.
பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்யும் வேலையை பற்றி பெருமை பேசாதீர்கள். எல்லோரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். நடக்கும் நிகழ்வுகளை பார்த்து பயப்பட வேண்டாம். அனைவரிடமும் இனிமையாக பேசி வார்த்தைகளால் அன்பை வெளிப்படுத்துங்கள்.
ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண், பல் சார்ந்த பிரச்சினைகள் வரும். கோபத்தை குறைக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்க தான் அதிகம் வெளிப்படுத்துவீங்க. முகத்தை சோர்வாக வைத்திருப்பது, அதிக கவலை, முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்க்கவும். வண்டி வாகனத்தில் செல்லும் போவது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். வேலையில் திடீர் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு 4ஆம் வீடு, எட்டாம் வீடு, 11ஆம் வீடுகளின் மீது சனி பகவானின் பார்வை படுகிறது. வருமானம் வரும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications