Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சனி சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு, விபத்து ஏற்படலாம்.. உஷார்..
Saturn Sun Make Shadashtak Yog On 23 August 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழைந்துள்ள சில நாட்களில், அதாவது ஆகஸ்ட் 23 ஆம் தேதி சூரியன் சனியுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சூரியனும், சனியும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் இருப்பார்கள்.

ஜோதிடத்தில் ஷடாஷ்டக யோகமானது ஆபத்தான யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது சனி சூரியனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தால் மோசமாக இருக்கும். அதுவும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படும். எதிரிகள் உங்களை விட வலுவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் ஆரோக்கியம் மற்றும் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ரிஸ்க்கையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். யோசிக்காமல் எந்த முடிவையும், வேலையையும் எடுத்துவிடாதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தால் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிரமங்கள் அதிகரிக்கலாம். மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. சிறு வெற்றியைப் பெறவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடனான உறவு மோசமடையும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பயணங்களை மேற்கொள்ளும் போது உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய வாக்குவாதங்கள் ஏற்படலாம். இக்காலத்தில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். இக்காலத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காது. ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படலாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications